முதல் பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக் கொன்ற முன்னாள் கணவர்: உத்தர பிரதேசத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் விபரீத செயல்

Date:

உத்தர பிரதேசத்​தின் ஜான்சி நகரின் முதல் பெண் ஆட்டோ டிரைவரை அவரது முன்​னாள் கணவர் துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். அவரை போலீ​ஸார் சுட்டு பிடித்​தனர்.

உத்தர பிரதேசத்​தின் ஜான்சி நகரைச் சேர்ந்​தவர் அனிதா சவுத்​திரி(40). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆட்டோ ரிக் ஷா ஓட்டி வந்​தார். இவர் முகேஷ் ஜா என்​பவரை 7 ஆண்​டு​களுக்கு முன் திரு​மணம் செய்​தார்.

பின்​னர் முகேஷ் ஜாவை விட்டு அனிதா சவுத்​திரி பிரிந்து வேறு ஒரு நபரை திரு​மணம் செய்​தார். அனிதா சவுத்​திரிக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். இரவு நேரத்​தில் அவர் ஆட்டோ ஓட்டி தனது குடும்​பத்​தினருக்கு உதவி வந்​தார். ரயில்வே நிலை​யத்​திலிருந்து பயணி​களை அழைத்து செல்​வதை அவர் வழக்​க​மாக மேற்​கொண்டு வந்​தார்.

இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் ரயில் நிலை​யம் அருகே துப்​பாக்​கியால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். அவரை முன்​னாள் கணவர் முகேஷ் ஜா கொலை செய்​திருக்​கலாம் என அனி​தா​வின் கணவர் மற்​றும் அனி​தா​வின் சகோ​தரி வினிதா ஆகி யோர் போலீ​ஸாரிடம் புகார் தெரி​வித்​தனர்.

இதனடிப்​படை​யில் முகேஷ் ஜாவின் நண்​பர்​கள் மனோஜ் ஜா மற்​றும் சிவம் ஜா ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர். தலைமறை​வான முகேஷ் ஜாவை போலீ​ஸார் தேடி வந்​தனர். இந்​நிலை​யில் அவரது கார் பெத்வா நதி​யின் நாட்​காட் பாலம் அருகே நின்​றிருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் பகவான்​புத்ரா மற்​றும் கர்​கான் சாலை​யில் முகேஷ் ஜா சென்று கொண்​டிருப்​பதை போலீ​ஸார் பார்த்​தனர்.

அவரை நிறுத்த முயன்​ற​போது, முகேஷ் ஜா, போலீ​ஸார் மீது தனது கைத்​துப்​பாக்​கி​யால் சுட்​டார். இதையடுத்து போலீ​ஸார் நடத்​திய பதில் தாக்​குதலில் முகேஷ் ஜாவின் காலில் குண்டு பாய்ந்​தது. அவரை சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனையில் போலீ​ஸார் சேர்த்​துள்​ளனர். அவரிட​மிருந்து துப்​பாக்கி மற்​றும் குண்​டு​களை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். ‘‘அனிதா சவுத்​திரி தன்​னை​விட்டு பிரிந்து சென்​றதை தாங்கி கொள்ள முடிய​வில்​லை. என்னை அவர் ஏமாற்​றிய​தால், அனி​தாவை சுட்​டுக்​ கொன்​றேன்’’ என போலீ​ஸாரிடம்​ முகேஷ் ஜா கூறி​னார்.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ளுணர்வு நிரலாக்கல் (Vibe Coding) பயிற்சிப் பட்டறை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானங்கள்...

AUTO X- மோட்டார் வாகனக் கண்காட்சி 2026 யாழ்ப்பாணத்தில்!

வடக்கின் போக்குவரத்து மற்றும் வாகனத் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில்,...

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்