நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்குமாறு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமிடம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
மாஸ்டரை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமை வில்லனாக நடிக்குமாறு கேட்டிருக்கிறார்களாம்.
பாலிவுட் படங்களில் ஹீரோவாக நடிப்பதுடன், வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் ஜான் ஆபிரகாம். அதனால் விஜய் படத்தில் வில்லத்தனம் செய்வது ஒன்றும் அவருக்கு பெரிய விஷயமாக இருக்காது.
ஜான் ஆபிரகாம் வில்லனாக நடிக்கக்கூடும் என்பதை அறிந்த தமிழ் ரசிகர்களோ, ஜான் நடித்தால் விஜய்யை ஓவர்டேக் செய்துவிட மாட்டாரா?. இந்த ஊரில் விஜய் சேதுபதி போன்று அந்த ஊரில் ஜான் ஆபிரகாம். இதற்கு விஜய் சேதுபதியே பரவாயில்லையே. அது ஏன் விஜய்க்கு என்று இப்படி வில்லங்கமான வில்லனாக அமைகிறார்கள்.
மாஸ்டரை அடுத்து தளபதி 65 படத்தில் ஜான் ஆபிரகாம் ஸ்கோர் செய்துவிடாமல் இருந்தால் சரி. சூதானமாக இருங்க விஜய் என்று தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டில் இருந்து நடிகர்களை அழைத்துச் சென்று டம்மி பீஸாக்கிவிடுவார்கள். போகாதீங்க ஜான் பாய் என்று இந்தி ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள். இதற்கிடையே இயக்குநர் செல்வராகவனை வில்லனாக நடிக்குமாறு கேட்டுள்ளதாக வேறு கூறப்படுகிறது.
விஜய்க்கு யார் தான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டியது தான். மாஸ்டரை அடுத்து விஜய் படத்தில் ஹீரோயின் யார் என்பதை விட வில்லன் யார் என்பதை தெரிந்து கொள்ளவே ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
அதே நேரம், மாஸ்டரை போன்று தளபதி 65 படத்தில் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் மாஸாக இருந்துவிடாது என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். லோகேஷ் செய்த தவறை நெல்சன் திலீப்குமார் செய்ய மாட்டார் என்கிறார்கள் ரசிகர்கள்.