12 பேரை திருமணம் செய்த பெண் கைது

Date:

போலீஸ் அதி​காரி உட்பட 12 பேரை ஏமாற்றி ரூ.8 கோடி மோசடி செய்து திரு​மணம் செய்த பெண்ணை உ.பி மாநில போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

உத்​தரபிரதேச மாநிலம் கான்​பூரைச் சேர்ந்​தவர் திவ்​யான்ஷி சவுத்​ரி (30), பி.எட் படித்​து​விட்டு சிடெட் தேர்​வெழுத தயா​ராகி வரு​வ​தாக திருமண தரகர்​களிடம் கூறி வந்​துள்​ளார். படித்த, குடும்​பப் பாங்​காக உள்ள இவரைப் பார்த்த ஆண்​கள் திரு​மணத்​துக்கு தயார் என்று கூறி​யுள்​ளனர்.

முதலில் ஆண் ஒரு​வரைத் தொடர்​பு​கொண்டு அவரது நம்​பிக்​கை​யைப் பெற்ற பின்​னர் அவருடன் நெருக்​க​மாக பழகு​வார் திவ்​யான்​ஷி. அதற்​கடுத்த சில நாட்​களில் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்ய வந்​தார் என்று அவரை மிரட்​டு​வார். மேலும் போலீஸ் நிலை​யத்​தில் பொய் புகார் கொடுத்து மிரட்​டு​வார். இதனால் பயந்​து​போன ஆண்​கள் பணம் கொடுத்து தப்​பித்​து​விடு​வர். இது​போன்று பல ஆண்​களிடம் திவ்​யான்ஷி கைவரிசையைக் காட்​டி​யுள்​ளார்.

மேலும் 3 பேரை மணந்து அவர்​களை மிரட்டி பல கோடி ரூ​பாயை இவர் சுருட்​டிக் உள்​ளார். அண்​மை​யில் கான்​பூரைச் சேர்ந்த ஆதித்ய குமார் லோதவ் என்ற போலீஸ் சப்​-இன்​ஸ்​பெக்​டரை 4-வது நபராக மணந்​தார் திவ்​யான்​ஷி. அப்​போது திவ்​யான்​ஷி​யின் போக்​கில் சந்​தேகம் கொண்ட ஆதித்​யகு​மார், திவ்​யான்ஷி குறித்து விசா​ரித்​த​போது அவர் பலரை ஏமாற்​றியது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை கான்​பூர் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீஸ் மூத்த அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “திவ்​யான்ஷி இது​வரை 4 பேரை திரு​மணம் செய்து ஏமாற்​றி​யுள்​ளார். இதில் 2 பேர் வங்கி மேலா​ளர்​கள். அவர்​கள் மீது முதலில் பாலியல் வன்​கொடுமை வழக்​கைப் பதிவு செய்​யும் திவ்​யான்ஷி பின்​னர், போலீஸ் நிலை​யத்​துக்கு வெளியே பணத்தை செட்​டில் செய்​து​கொண்டு வழக்கை முடித்​துக் கொள்​வார். இதே​போல் எஸ்​.ஐ. ஆதித்​யகு​மார் உட்பட 2 அரசு அதி​காரி​களை​யும் இவர் திருமணம் செய்​தார். சுமார் ரூ.8 கோடி வரை இவர் மோசடி செய்​துள்​ளார்.

இவருக்கு பல அலு​வல​கங்​களில் அதி​காரி​கள், ஊழியர்​களு​டன் பழக்​கம் உள்​ளது. பலரின் உதவி​யுடன் இந்த பாலியல் வன்​கொடுமை பொய் புகார்​கள் உள்​ளிட்ட சம்​பவங்​களை அரங்​கேற்றி வந்​தார். அவரது செல்​போனில் உள்ள யுபிஐ ஐ.டி.யை சோதனை செய்து பார்த்​த​தில் கோடிக்​கணக்​கான பணம் இவரது வங்​கிக் கணக்​கு​களுக்​கு வந்​துள்​ளது தெரிய​வந்​துள்​ளது” என்​றார்​.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்