இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால், ஜூன் மாத இறுதிக்குள் 30,000 கொரோனா மரணங்கள் பதிவாகலாமென்ற அமெரிக்க பல்கலைகழகத்தின் ஆய்வு உண்மையாகி விடும் என எச்சரித்துள்ளார் சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்.
இன்று கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது இதனை தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்வுகூறப்பட்ட கொரோனா நிலைமையை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.
ஜூன் மாத இறுதிக்குள் இலங்கையில் 30,000 கோவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகலாமென அமெரிக்க பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனத்தின் கணிப்புகள் குறித்து பத்திரிகையாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டபோது, தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தா விட்டால் இந்த கணிப்பு உண்மையாகி விடும் என்றார்.
முதல் அலை தாக்கத்தின் போதும், இதேபோன்ற ஒரு கணிப்பு நிபுணர்களால் செய்யப்பட்டது. இதுபோன்ற கணிப்புகளை சுகாதார அதிகாரிகள் கருத்தில் கொண்டு அதன்படி செயல்படுவதாகவும் கூறினார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைத்தால், இந்த நிலைமையை கட்டுப்படுத்தலாம்.