சாவகச்சேரி நகராட்சி மன்ற உபதலைவர், உறுப்பினருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த பெண்

Date:

சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் கு.பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக பெண் ஒருவர் சாவகச்சேரி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இருவரையும் அழைத்து வாக்குமூலம் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் கோவில்குடியிருப்பு உப்புக்கேணிக்குளம் தூர்வாரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுள்ளது.

தூர்வாரும் பணிகளை கண்காணிக்கச் செல்லும் நகரசபை உறுப்பினர்களை அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அவதூறான வார்தைகளில் பேசி கலைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சபை அமர்வில் உறுப்பினர்களால் குறித்த விடயம் விவாதிக்கப்பட்டதோடு உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து மாதாந்த அமர்வு நிறைவடைந்ததும் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உப்புக்கேணிக்கு களவிஜயம் மேற்கொண்டனர்.

இதன்போதும் குறித்த பெண் நகராட்சி மன்ற உறுப்பினர்களை தகாத வார்த்தைகளில் பேசியதோடு வீடியோ பதிவு செய்துள்ளார். இதையடுத்து உபதவிசாளர் கிஷோர் உறுப்பினர்களோடு மரியாதையோடு நடந்து கொள்ளுமாறும் நகரசபையின் பணிகளில் தலையிட வேண்டாம் எனவும் குறித்த பெண்ணை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் உபதவிசாளர் கிஷோர் மற்றும் வட்டார உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் தன்னை அச்சுறுத்தி தொலைபேசியை பறித்ததாக குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இதனால் உபதவிசாளர் கிஷோர் மற்றும் உறுப்பினர் பிரணவராசா ஆகியோர் இன்றைய தினம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.

இதன்போது முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நகரசபையின் அபிவிருத்திப் பணிகளிலும் உறுப்பினர்களின் பணிகளிலும் குறித்த பெண் தலையிட முடியாது என்றும் அபிவிருத்தி பணிகளில் குறைபாடு இருந்தால் நகரசபைக்கு எழுத்துமூலமாக அறிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தி வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முடிவுறுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

நான் அவனில்லை: பெண்களை ஏமாற்றும் இந்த ஆசாமியை கண்டால் பொலிசாருக்கு அறிவியுங்கள்!

கண்டி தெல்தெனிய மருத்துவமனை அருகே காரில் மர்மமான முறையில் உயிரிழந்த பிசியோதெரப்பிஸ்டின்...

சுரேஷ் சாலேவின் மனைவியின் நாடகம் தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென்ற சந்தேகத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச்...

மட்டக்களப்பில் நெல் விலையை அதிகரிக்க கோரி விவசாயிகள் பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி இன்று செவ்வாய்க்கிழமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்