கொடிகாமம் விபத்தில் ஒருவர் பலி

Date:

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் – யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப் பயணித்த டிப்பர், கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் 35 வயதான நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தனது சோதிடருக்கு அரசு நியமனம் வழங்கிய விஜய்: சந்தி சிரிக்கும் முடிவை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்!

தமிழக முதல்வரின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்...

விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து...

போக்குவரத்து விதிகளை மீறி ரிக்ரொக் வீடியோ: 3 யுவதிகள் கைது!

புத்தல-அம்பகொலவெவ வீதியில் தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்