கருணா- பிள்ளையான் குழுவினால் கொன்று புதைக்கப்பட்டவர்களின் மனிதப் புதைகுழியை தேடி வேட்டை!

Date:

பாறுக் ஷிஹான்

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா ஒருவர் தம்பிலுவில் இந்து மயானத்திற்கு நேற்று (29) குற்றப்புலனாய்வாய்வு பிரிவினரால் அழைத்துவரப்பட்டு அந்த இடம் சோதனை செய்யப்பட்டது.

கடந்த யுத்த காலத்தில் மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத் தமிழ் பகுதிகளில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இயங்கிய காலகட்டத்தில் இம்மயானத்தில் ஆயுதங்கள் உட்பட கடத்தப்பட்ட பலரும் சுடப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றுஅம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தம்பிலுவில் இந்து மயானத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

இந்த சோதனை நடவடிக்கையின் போது கருணாக் குழுவின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் இனியபாரதியின் கைதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருந்த கல்முனை அலுவலக பொறுப்பாளராக இருந்த நபர் அழைத்துவரப்பட்டு குற்றப்புலனாய்வாய்வு பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்-

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்