மஹா படம் தணிக்கை முடிந்து ஓடிடியில் வெளியாகிறதா? இயக்குநர் விளக்கம்!

Date:

மஹா திரைப்படம் தணிக்கை முடிந்து ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது என்கிற செய்திக்கு மறுப்பு தெரிவித்து படத்தின் இயக்குநர் ஜமீல் ட்வீட் செய்துள்ளார்.

ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் ‘மஹா’. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்து வருகிறார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்தப் படத்தில் சிலம்பரசன் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்களிடையேயும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஆனால் படம் ஆரம்பித்து பல வருடங்கள் கழித்தும் படத்தைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்பதில் ரசிகர்கள் சிலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் வேலைகள் முடிந்துவிட்டதாகவும், தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் சிலர் ட்விட்டரில் பகிர்ந்து வந்தனர்.

இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கும் படத்தின் இயக்குநர் யுஆர் ஜமீல், “இது பொய்யான செய்தி. சிலம்பரசன் அவர்களின் ரசிகர்கள் எப்படி உணர்வார்கள் என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. மஹா ஆரம்பித்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்குத் தெரியும். ஆனால் எனது படத்தைப் பற்றிய சரியான தகவல் தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். என் படத்தின் மீது எஸ்டிஆர் ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...

அமெரிக்காவில் வீடொன்றில் 8 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்