உடைமாற்றும் அறைக்குள் இரகசியமாக படம்பிடித்தபோது சிக்கினார்: கனடாவில் கைதான தமிழன்!

Date:

கனடாவில் விற்பனை மையமொன்றின் உடை மாற்றும் அறைக்குள் இருந்தவர்களை இரகசியமாக கையடக்க தொலைபேசியில் படம் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

யோர்க் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 30 வயதான ஜெரான் நித்தியானந்தராஜா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பொலிசாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமை “ஹூவர் பார்க் டிரைவ் மற்றும் ரூஜ்வியூ அவென்யூ பகுதியில்” உள்ள ஒரு “ஷாப்பிங் சென்டரில்” ஒரு உடைமாற்றும் அறையில்” இருந்தபோது, அறை சுவருக்கு அடியில் இருந்து ஒரு செல்போன் அவர்களை இரகசியமாக படம் பிடிப்பதை கவனித்தார்.

இதனை அடுத்து  சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசாரட, ஆட்கள்  உடைமாற்றுவதை இரகசியமாக படம்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் ஜெரான் நித்தியானந்தராஜாவைக் கைது செய்தனர்.

யோர்க் பிராந்திய காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரின் படத்தை வெளியிட்டுள்ளது. பொலிஸ் புலனாய்வாளர்கள் இவரால் இன்னும் கூடுதலானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

இவரால் தாங்கள் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று நம்பும் எவரும் பொலிசாரிடம் பேச வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்