மட்டக்களப்பு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

Date:

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்டதில் நபர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கன்னங்குடா கிராமத்தில் கண்ணகியம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வீதியிலே இன்று (02) ஆம் திகதி பிற்பகல் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்இணைப்பு – குடிநீர் பிரச்சினை காரணமாக இருவருக்கிடையில் இடம் பெற்ற வாக்குவாதத்தில் துப்பாக்கிதாரி தன்னிடம் இருந்த உள்ளூர் தயாரிப்பான கட்டு துப்பாக்கியால் சுட்டதில் நபர் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் 37 வயதான சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்