உள்ளூராட்சி கூட்டணி: தமிழ் அரசு, தமிழ் காங்கிரஸ் வெள்ளிக்கிழமை நேரடிப் பேச்சு!

Date:

உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது குறித்து இலங்கை தமிழ் அரசு கட்சியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரடிப் பேச்சு நடத்தவுள்ளன.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மேற்கொண்ட முயற்சியையடுத்து, இந்த சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை காலையில், தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது குறித்து பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்தார்.

இதற்கு கஜேந்திரகுமார் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.

தமிழ் அரசு கட்சியின் தரப்பில் தானும், எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொள்வதாக சீ.வீ.கே தெரிவித்துள்ளார்.

இதில் தனக்கு ஆட்சேபணையில்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொங்கோவில் 321 பேருக்கு எபோலா தொற்று

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா பரவலில், 321 பேருக்கு எபோலா...

ஈரானின் உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறார்… தீவிரமாக செயற்படுகிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர்!

அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்து, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் காணப்படாத ஈரானின் உச்ச தலைவர்...

4 வருடம் சேர்ந்த வாழ்ந்த 22 வயது காதலியை கொன்று புதைத்த காதலன் தலைமறைவு!

தெல்தெனிய, ரங்கல, ஹக்மான கிராமத்தில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில், அடித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்