மேர்வின் சில்வாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

Date:

தொழிலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், 150 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பராமரித்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று (27) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது சட்டபூர்வமான வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பராமரித்ததன் மூலம் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மற்றும் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, கடவத்தை பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக ஒரு கோடியே 39 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதுடன், கொழும்பு-07, அர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக 7 கோடியே 13 இலட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணத்தையும் முன்னாள் அமைச்சர் செலவு செய்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகன் மாலக சில்வாவிற்காக mercedes benz காரை கொள்வனவு செய்வதற்காக 3 கோடியே 23 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதாகவும், ஹூண்டாய் காரை கொள்வனவு செய்வதற்காக 55 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தையும், டிஃபென்டர் வாகனத்தை கொள்வனவு செய்வதற்காக 88 லட்சத்து 50 ஆயிரம் பணத்தையும் செலவிட்டுள்ளமை உட்பட தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அப்பால் சொத்துக்களை ஈட்டியதன் மூலம் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் ஊடாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்