முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், ஐனாதிபதி செயலகத்தால் நிகழ்வுகள் ஒன்றுகூடல்கள் அனைத்தையும் நிறுத்துமாறு வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தை உதாசீனம் செய்ததாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
2021 ம் ஆண்டுக்கான சமுர்த்தி சித்திரை சேமிப்பு நிகழ்வின் முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை சமுர்த்தி வங்கி முதலிடம் பெற்றுள்ளது.
இதனை கெளரவிக்கும் பொருட்டு முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உள்ளிட்ட குழு வங்கிக்கு சென்று அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களையும் வழங்கி, பொங்கல் பொங்கி வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
ஐனாதிபதி செயலகத்தால் நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள் அனைத்தையும் நிறுத்துமாறு சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும், அதையும் மீறி நிகழ்வு இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம் வைக்கப்படுகிறது.