குரங்கு மோதியதால் நாடு முழுவதும் மின் தடை!

Date:

பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு மோதியதன் காரணமாக, இலங்கையின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இதுகுறித்து தகவல் வழங்கி, நாடு முழுவதும் மின்சாரம் விநியோகத்தில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இந்தத் திடீர் மின்தடையை தீர்க்க மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சு செயற்பட்டுள்ளதுடன், அவசர நிலை படி, பாணந்துறை துணை மின்நிலையத்தில் வேலைகள் நடந்து வருகின்றன. மின்சாரத்தை விரைவில் மீண்டும் வழங்க சில குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இன்று மாலைக்குள் வழமைக்கு மின் விநியோகத்தை கொண்டுவர முடியும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கை மின்சார சபை (CEB) இந்த நிலைமைக்கு அதிகாரப்பூர்வ விளக்கத்தை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்