பல லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

Date:

நேற்றைய தினம் (04) காலை கேரள கஞ்சா பொதிகளை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை நேற்று (04) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதனடிப்படையில், மன்னார்- அடம்பன் பொலிஸார் நேற்று (04) காலை விடத்தல் தீவு குளப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா தொகையை மீட்டனர்.

சந்தை பெறுமதி 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான சுமார் 28 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வெளியேற நீதிமன்றம் உத்தரவு

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த...

வடக்கு, கிழக்கு பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அதற்கு மறுநாளான திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும்...

கொழும்பு தேசிய வைத்தியசாலை இயல்புக்கு திரும்பியது!

கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்