நாட்டிலும், கிழக்கிலும் பரவலாக பரவிவரும் கோரோனோ அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இன்று (06) மாளிகைக்காடு பிரதேச மீன் சந்தை வியாபாரிகள், மீன் வாங்குவதற்காக வருபவர்கள், தூர இடங்களில் இருந்து மீன்களை கொண்டு வருபவர்கள், முகக் கவசம் அணியாமல் வீதிகளில் உலாவித்திரிவோருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் டீ. வேல்முருகு, பொது சுகாதார பரிசோதகர் கே.ஜெமீல், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் கடற்கரை பிரதேசத்தின் சுகாதார நிலை பற்றியும் இதன்போது ஆராய்ந்தனர்.