27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

இன்று (31) சர்வதேச தொழுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் திருகோணமலையில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருக்கோணமலை வளாக மாணவர்கள் மற்றும் திருகோணமலை சுகாதார வைத்திய பணிமனை இணைந்து குறித்த கவனயீர்ப்பு பேரணியை காலை 9.30 மணிக்கு மேற்கொண்டிருந்தனர்.

திருக்கோணமலை பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த குறித்த கவனயீர்ப்பு பேரணியில் நூற்றுக்கு அதிகமான மாணவர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் நடைபவனியாக திருகோணமலை நகர சபைக்கு முன்னால் வந்து சேர்ந்து பேரணியை முடிவுக்கு கொண்டுவந்திருந்தனர்.

பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பொது சுகாதார வைத்தியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் இப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

சமூகத்தில் தொடர்ச்சியாக தொழுநோய் தொடர்பான பிழையான அபிப்ராயங்கள் வருவதால் சமூகத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் இப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்,

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக பி. பிரியதர்ஷன்

east tamil

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

east tamil

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் அதிகாரிகளுடன் சந்திப்பு

east tamil

இளக்கந்தை பகுதியில் சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி போராட்டம்

east tamil

மட்டக்களப்பில் மின்சாரத் தடை – கடும் அவதியில் மக்கள்

east tamil

Leave a Comment