26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மாவைக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள அனுர!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராசாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் இன்று இறுதியாகும் என குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை நடத்துவதென முன்னர் திட்டமிடப்பட்ட போதும், தற்போது அதில் மாற்றம் நிகழலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

மூளை நரம்பு வெடித்து இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், கோமா நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாவை சேனாதிராசா நேற்று (29) இரவு 10.00 மணிக்கு காலமானார்.

அவரது மூளையில் பாரதூரமானளவு இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால், நிலைமை மருத்துவர்களின் கையை மீறிச் சென்றிருந்ததை நேற்று முன்தினம் தமிழ்பக்கம் வெளிப்படுத்தியிருந்தது.

கோமா நிலைமையில் இருந்து மீளாமலேயே நேற்று இரவு அவர் காலமானார்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு தனது பாடசாலை கல்விக்காலத்திலிருந்தே பங்களித்து வந்தவர் மாவை சேனாதிராசா. திருகோணமலையில் சிங்களக்குடியேற்றங்களை தடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து இளைஞர்கள் சென்று, அங்குள்ள காணிகளில் குடிசைகள் அமைத்து தங்கியிருந்த சமயத்தில், உயர்தர பரீட்சைக்கு தோற்றாமல் அங்கு சென்று குடிசைகளில் தங்கியிருந்த காலம் தொடக்கம் தீவிர அரசியலில் பங்காளி அவர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட மிதவாத அரசியல் தலைவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களினால் குறிவைக்கப்பட்ட போதும், மாவை சேனாதிராசா தொடர்பில் அனைத்து இயக்கங்களிடையேயும் உயரிய மரியாதை இருந்தது. வேறெந்த மிதவாத தலைவர்களிடத்திலும் இப்படியான பார்வை இருக்கவில்லையென்பதே மாவையின் போராட்ட வரலாற்றுக்கு தெளிவான சான்றாகும்.

எனினும், கட்சிக்குள் வலுத்த உட்கட்சி மோதலை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது பல தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டது. அப்படி வலுவடைந்த ஒரு தரப்பினராலேயே அவர் ஒதுக்கப்பட்டு, மனமொடிந்த நிலையில் அவரது இறுதிநாட்கள் கழிந்ததே மிகப்பெரிய துயரம்.

மாவை சேனாதிராசாவின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுமென குடும்ப வட்டாரங்கள் முன்னர் தீர்மானித்திருந்தனர். எனினும், தற்போது அதில் மாற்றம் நிகழும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தன. மாவிட்டபுரத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும்.

இதேவேளை, நாளை யாழ்ப்பாணம் வரும் அனுரகுமார திசாநாயக்கவும் மாவை சேனாதிரசாவின் வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என தெரிகிறது.

அனுரகுமார மாவையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவதற்கான முன்னேற்பாடுகளில் பாதுகாப்பு வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment