கடந்த சில நாட்களாக ஏறாவூர்ப்பற்று பிரதேசங்களுக்குட்பட்ட கரடியனாறு, இலுப்படிச்சேனை, குமாரவேலியார் ஆகிய கிராமங்களில் மாட்டு கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில், ஏறாவூர்ப் பிரதேச இளைஞர் உதயராஜ் (ராஜா) அவர்களின் அயராத முயற்சிகளாலும், இளைஞர்களின் ஒத்துழைப்பினாலும், களவாடப்பட்ட மாடுகளில் ஒன்றை காத்தான்குடி மாடறுக்கும் மடுவத்தில் நேற்று முன் தினம் (24) நள்ளிரவு 12.00 மணியளவில் கண்டுபிடிக்க முடிந்தது.
இதனுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், களவாடப்பட்ட மற்ற மாடுகளை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இக் கொள்ளை சம்பவம் குறித்து, பலமுறை உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்திருந்தாலும், அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்ற நிலையில், இளைஞர்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளின் மூலம் இந்தச் சம்பவம் வெற்றியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.