27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
குற்றம்

ஆபாச படம் காண்பித்து மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!

தன்னிடம் கல்வி கற்ற மாணவிக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாடசாலை ஆசிரியரை காலி மேலதிக நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

50 வயதான பாடசாலை ஆசிரியரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபர் அந்த பகுதியில் தனியார் வகுப்பை நடத்தி வருகிறார். அங்கு கல்வி கற்ற மாணவியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் வகுப்பில் யாருமில்லாத சமயத்தில் மாணவியை அழைத்து தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காண்பித்துள்ளார்.

பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதெனில் தனக்கு ஒத்துழைக்க வேண்டுமென குறிப்பிட்டு, ஆபாச படங்களில் காண்பிக்கப்படுவதை போல செயற்பட கூறி, தனது ஆடையை களைந்துள்ளார். மாணவி தப்பிச் செல்லும்போது, அவர் பலவந்தமாக பிடித்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெளியில் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

பிறிதொரு நாள், மாணவியை சுவருடன் சாய்த்து, கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, நடந்த சம்பவங்களை வெளியில் சொல்ல கூடாதென மிரட்டியுள்ளார்.

மாணவி சம்பவம் தாயார் பொலிஷ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

இலங்கையை உலுக்கிய கொள்ளைக்கும்பல் கைது: 36 வயது தலைவி… 22 வயது கணவன்!

Pagetamil

கடன் தொல்லையால் இளம் தம்பதி விபரீத முடிவு: காட்டுக்குள் அருகருகாக சடலங்களாக மீட்பு!

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியைக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment