சிறைகளில் நடைபெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த விசேட அதிரடிப்படையின் சிறப்பு அணிகள் முக்கிய சிறைகளில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும், இவ் அணிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுவதன் மூலம், இதன் செயல்திறன் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கை, சிறைகளில் உள்ள சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு முறையை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும் என கருத்தப்படுகிறது.
விசேட அதிரடிப்படையின் பணிகள், சிறை முகாம்கள் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் செயல்படுவதோடு, சிறை முகாங்களில் அமைதி நிலைமையை உறுதி செய்யும் என்றும் நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவ் அணிகளை மாற்றுவது, பாதுகாப்பு குழுக்களின் நடுநிலைத் தன்மையையும் செயல்திறனையும் உறுதி செய்யும் முக்கிய வழிமுறையாக அமையும் அதே வேளை, இவ்வாறான நடவடிக்கைகள் மூலம், சிறைகளின் மீதான அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கப்படும் எனவும், குற்றச்செயல்களை ஒழிக்க துரிதமான முன்னேற்றம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.