மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் ஏறாவூர் பகுதிகள் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் வீடுகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பொதுப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சித்தாண்டி மற்றும் ஏறாவூரின் சிறு குடியிருப்புகள் மற்றும் விவசாயப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் வடிகாலமைப்பு குறைபாடுகள் மழையால் அதிகரித்துள்ளதாகவும், குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1