சற்று முன்னர் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளாக்கியதில் 06 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மட்டக்களப்பு முறக்கட்டாஞ்சேனை பகுதியில் எரிபொருள் பவுசர் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த அறுவரும் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட, இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் கிடைக்கப்படவில்லை. இவ் விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1