25.1 C
Jaffna
January 19, 2025
Pagetamil
கிழக்கு

ஓட்டமாவடி கூட்டுறவு சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா, சங்கத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாரூன் ஸஹ்வியின் தலைமையில், கடந்த சனிக்கிழமை (18) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரன் அவர்களும் பங்கேற்றார்.

திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டு புதிய காரியாலயத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

இதையடுத்து, மட்/ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சங்கத்தின் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழாவிலும் அதிதிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எரிபொருள் பவுசர் – முச்சக்கரவண்டி விபத்து

east tamil

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

east tamil

காரைதீவு நேரு சனசமூக நிலைய வருடாந்த ஒன்றுகூடலும், 75 ஆண்டு பவள விழாவும்

east tamil

திருகோணமலையில் அதிகூடிய மழைவீழ்ச்சி

east tamil

காலநிலைமாற்றம்: கிழக்கு பாடசாலைகள் முடக்கம்!

east tamil

Leave a Comment