25.1 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

நேற்றைய தினம் (17) கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைசசர் ரி.பி சரத் ஆகியோர் கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் பணிகளை பார்வையிட்டுள்ளனர்.

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் (WaSSIP) கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும், அதன் செயற்பாடுகளையும் அமைச்சர், பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன், மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வடக்கு மாகாண பிரதிபொது முகாமையாளர், உதவி பொது முகாமையாளர், பொறியியலாளர்கள் உத்தியோகத்தர்கள்
ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதியமைச்சருக்கு யோதிலிங்கம் கண்டனம்

east tamil

ஹோட்டல் அடித்தளம் இடிந்து விழுந்து ஆறு மாணவர்கள் படுகாயம்

east tamil

மன்னார் துப்பாக்கிச் சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

east tamil

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

east tamil

மாடுகளை கடத்திய இருவர் கைது

east tamil

Leave a Comment