25.7 C
Jaffna
January 17, 2025
Pagetamil
உலகம்

உரிமையாளருக்காக 2 மாதங்கள் காத்திருக்கும் நாய்

தாய்லந்தில் உரிமையாளருக்காக 2 மாதங்களாகக் காத்திருக்கும் ஒரு நாய் இணையவாசிகளின் மனத்தை நெகிழ வைத்துள்ளது.

‘Moo Daeng’ என்ற அந்த நாயை வீடற்ற ஒருவர் வளர்த்து வந்தார்.

உரிமையாளரும், நாயும் நாக்கோன் ரட்சாசிமா மாநிலத்தில் உள்ள 7-Eleven கடை வாசலில் படுத்துக்கொள்வதுண்டு.

உரிமையாளர் நவம்பர் மாதத்தில் இறந்து விட்டார்.

ஆனால் அவர் ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் Moo Daeng எங்கும் செல்லவில்லை.

கடையின் உரிமையாளர் நாயைப் பார்த்துகொள்கிறார். அதற்குப் போர்வையும் அளித்து உணவும் கொடுக்கிறார்.

மற்ற நாய்ப் பிரியர்களும் உணவு அளிக்கின்றனர்.

Moo Daengஇன் கதை அண்மையில் Facebook பக்கத்தில் பகிரப்பட்டது. அந்த கதை இணையவாசிகளின் மனதை நெகிழச் செய்து விட்டது.

எவ்வாறு ஜப்பானில் Hachi என்ற நாய் அதன் உரிமையாளருக்காகத் தொய்வின்றிக் காத்திருந்ததோ அதைப் போன்று Moo Daeng நாயும் காத்திருக்கிறது என்று இணையவாசிகள் கருத்துரைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதிகள் துணையுடன் உறவு கொள்ள சிறைச்சாலைகளுக்குள் ‘காதல் அறைகள்’: இத்தாலி உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்படும் மாற்றம்!

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

எலான் மஸ்க் வசமாகும் டிக்டொக் செயலி

east tamil

அமெரிக்க பாராளுமன்றத்தில் தமிழ் மாதமாக ஜனவரி

east tamil

பைடன் நிர்வாகம் ஒரு வருடம் முயன்றும் முடியாததை ட்ரம்ப் தரப்பு ஒரு சந்திப்பில் சாத்தியமாக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment