27.3 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

தேசிய மக்கள் சக்தியினர் மீது வாள்வெட்டு

பருத்தித்துறை கொட்டடிப் பகுதியில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

பருத்தித்துறை கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயதீபன் கண்ணன் (28) மற்றும் விஜயராசா செந்தூரன் (29) ஆகியோரின் தலை மற்றும் கால் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு முன்னதாக, நேநேற்று பிற்பகல் 3 மணியளவில் தொலைபேசி மூலம் பருத்தித்துறை – கொட்டடியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளருக்குத் தொடர்பு எடுத்த நபர் ஒருவர் நீ தானே எம்.பி.பி. அமைப்பாளர். கரையோரப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்காக நீ தானே வேலை செய்கின்றாய்? உங்கள் கொட்டத்தை அடக்க உங்களது இடத்துக்கு வாள்வெட்டுக் குழுவென்று வருகின்றது பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.

அச்சுறுத்தலுக்குப் பின்னர், சுமார் பத்து நிமிடங்களில் மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர், அங்கிருந்தவர்களைத் துரத்தி, சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இ. சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் விரைந்து வந்து, சூழலினை ஆராய்ந்ததுடன், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடினர்.

பருத்தித்துறைப் பொலிஸார் தாக்குதல்தாரிகளை அடையாளம் காணும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால், இது அரசியல் மற்றும் சமூகவியலுக்கான அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கரையொதுங்கிய மர்ம படகில் 18 புத்தர் சிலைகள் மீட்பு

east tamil

அம்பாந்தோட்டையில் சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

east tamil

நெல்லுக்கான உத்தரவாத விலை தேவை

east tamil

மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை – பொலிஸ் தீர்மானம்

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment