யாழ்ப்பாணம், வடமராட்சியில் யுவதியொருவர் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. எனினும், அது தவறான தகவலாகும்.
அந்த சம்பவத்தின் உண்மை பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராஜகிராமம் பகுதியை சேர்ந்த 27 வயதான யுவதியொருவரே கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அவர் வாய் பேச முடியாதவர். யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது.
எனினும், யுவதி கடத்தப்படவில்லை.
யுவதியை வீட்டில் காணவில்லையென்றதும், அவர் கடத்தப்பட்டு விட்டதாக பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பொலிசார் இது குறித்து விசாரணையை ஆரம்பித்த போது, யுவதி வீடு திரும்பி விட்டதாக யுவதியின் பெற்றோர் பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
தன்யை பேய் எங்கேயோ அழைத்துச் சென்றதாக யுவதி தெரிவித்ததாக, பெற்றோர் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
யுவதியை பொலிஸ் நிலையம் வருமாறு பொலிசார் அறிவித்த போதும், யுவதி பொலிஸ் நிலையம் வரவில்லை.
அவர் வேறு எங்கோ சென்று திரும்பியிருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கின்றனர்.