பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடந்த விருந்தின் போது, பொலிஸார் சோதனை நடத்தி 10 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த விருந்து முகநூல் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அங்கு சட்டவிரோதமாக 45 மதுபான போத்தல்கள் மற்றும் 550 மில்லிகிராம் கொக்கைன் போதைப்பொருள் கிடைத்துள்ளது.
கைதானவர்கள் 18 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் எனவும், அவர்கள் நேற்று (12-01-2024) பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1