ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த அரசியல்வாதியான இந்திரதாச ஹெட்டியாராச்சி இன்று (12) தனது 97 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்களிப்பு வழங்கிய இந்திரதாச ஹெட்டியாராச்சி, தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையின் மூலம் மக்கள் நலனுக்காக பல்வேறு முக்கியமான பணிகளை முன்னெடுத்தவராவார்.
-அவரின் உடல் நாளை (13) கொழும்பிலுள்ள ஜெயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், 14ம் திகதி அவரது சொந்த இடமான ஹேனகம, பொகுன்விட்டவிலுள்ள அஜந்தா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (15) அன்று பிற்பகல் 3.30 மணிக்கு, பொகுன்விட்டவிலுள்ள கேந்திர மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரதாச ஹெட்டியாராச்சி 1920களில் பிறந்த இவர், கல்வி, சட்டம் மற்றும் அரசியலில் சிறந்து விளங்கியவர். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான உறுப்பினராகவும், பல அமைச்சுகளின் பொறுப்பை ஏற்றார். அவரது நேர்மையும், மக்களுக்காக வழங்கிய சேவைகளும் அவரை ஒரு சிறந்த அரசியல்வாதியாக மக்களின் மனதில் நிலைத்திருக்க வைத்துள்ளமை குறிப்பிபாத்தக்கதாகும்.