மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதியில் செல்வாநகர் மத்தி பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர்சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில், மோட்டர்சைக்கிளில் பயணித்த இரு நபர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்துள்ளனர்.
அவர்களை உடனடியாக ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகத் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1