சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸ், இலங்கையில் அவ்வப்போது அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ் நோயாகும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் ஜூட் ஜெயமஹ கூறினார்.
இந்த வைரஸ் குறித்து தேவையற்ற பயம் கொள்ளக்கூடாது என்றும், வைரஸின் அறிகுறிகளில் பொதுவான இருமல், சளி மற்றும் லேசான காய்ச்சல் ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறினார். இலங்கை மருத்துவ சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று முன்தினம் (07) பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பல்வேறு நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும் என்றும், நிமோனியா ஏற்படக்கூடும் என்றும், இது அரிதான நிகழ்வாகும் என்றும் அவர் கூறினார்.
நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, முகமூடி அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.