விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’ படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
வெங்கடேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், ‘த கோட்’ படம் வெளியான பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“அந்த படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டேன். இதனால் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது. ஒரு வாரம் பாதிக்கப்பட்டேன். ஆனால், நான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் என் நடிப்பு பாராட்டப்பட்டது. இனி நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வேண்டும் என்று அப்போதுதான் முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1