ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Date:

இந்தியாவின் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். ஜனநாயக சீர்​திருத்​தங்​களுக்கான சங்கம், இந்தியா​வில் உள்ள மாநில முதல்​வர்​களின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை கடந்த திங்​கட்​கிழமை வெளி​யிட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா​வில் மொத்தம் உள்ள 31 மாநில முதல்​வர்​களின் சொத்து மதிப்பு ரூ.1,630 கோடியாக உள்ளது. அதில், ஆந்திர முதல்வர் சந்திர​பாபு நாயுடு​வின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.931 கோடியாக உள்ளது. இதன் மூலம் இந்தியா​வின் பணக்கார முதல்​வராக சந்திர​பாபு இருக்​கிறார்.

அதேநேரத்​தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்​ஜி​யிடம் ரூ.15 லட்சம் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மிகவும் ஏழை முதல்​வராக அவர் இருக்​கிறார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களைச் சேர்ந்த முதல்​வர்​களின் சராசரி சொத்து ரூ.52.59 கோடியாக உள்ளது.

சந்திர​பாபுவுக்கு அடுத்து அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு பணக்கார முதல்​வர்கள் வரிசை​யில் 2வது இடத்​தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.332 கோடி​யாகும். கர்நாடக முதல்வர் சித்த​ராமையா ரூ.51 கோடி சொத்து​களுடன் 3வது இடத்​தில் இருக்​கிறார். தவிர காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ரூ.55 லட்சத்​துடன் ஏழை முதல்​வர்கள் வரிசை​யில் 2வது இடத்​தில் உள்ளார்.

தங்கள் மீது கிரிமினல் வழக்​குகள் உள்ளதாக 13 முதல்​வர்கள் அறிவித்​துள்ளனர். அத்துடன், கொலை முயற்சி, கடத்​தல், ஊழல் என மிக தீவிரமான கிரிமினல் வழக்​குகள் உள்ளதாக 10 முதல்​வர்கள் அறிவித்​துள்ளனர். நாட்​டில் உள்ள 31 முதல்வர்களில் மேற்கு வங்க மம்தா,டெல்லி முதல்​வர் அ​திஷி ஆகிய இரு​வர் மட்டுமே பெண்​கள். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்பட்டுள்​ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்