24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

மீளவும் ஆரம்பமாகும் நாகை – இலங்கை கப்பல் சேவை

நாகை – இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை இடையேயான கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக சமீபத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீளவும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் தொடங்கப்படும் எனவும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவை வாரத்திற்கு 6 நாட்கள் இருக்கும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனம் மீது அவகீர்த்தி சுமத்தியதற்காக எம்.பி. மீது குற்றச்சாட்டு

east tamil

Leave a Comment