75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

Date:

இன்றைய தினம் (29) 75,000 மெற்றிக் தொன் அரிசி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட 75,000 மெற்றிக் தொன் அரிசியில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 43,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், சுங்கத்திற்கு அனுப்பப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுவார்த்தையில் அமெரிக்கா அளவுக்கு அதிக நிபந்தனைகள் விதிக்கிறது: ஈரான் தகவல்!

இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானில் ஈரானிய மற்றும் அமெரிக்க...

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி அகற்றலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்: அமெரிக்க இராணுவம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான "சூழ்நிலைகளை அமைக்கும்" பணியைத் தொடங்கியுள்ளதாகவும், இரண்டு...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்