Pagetamil
உலகம்

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11ஆவது நாடாக கணக்கெடுக்கப்பட்டுள்ள நேபாளம் நாட்டில் இன்று அதிகாலை 3.59 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசிய புவியியல் மையத்தின் கணக்கீட்டின்படி, 4.8 ரிச்டர் அளவில் பதிவான இந் நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்படுத்தியதோடு, அட்சரேகையின் 29.17 வடக்கு மற்றும் தீர்க்கரேகை 81.59 கிழக்கில் நிலை கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

நேபாளத்தில், கடந்த 2015ல் 7.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர்.

இந் நிலநடுக்கம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதூது, பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளின் உரிமையை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுப்பதே போர் நிறுத்தத்திற்கு சிறந்த வழி!

Pagetamil

வரிப் போர்: ஹாலிவுட் படங்களை குறி வைக்கும் சீனா!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!