26.5 C
Jaffna
December 30, 2024
Pagetamil
குற்றம்

குடு சலிந்து பிணையில் விடுதலை!

பிரபல போதைப்பொருள் கடத்தல் குழு தலைவரும் பாதாள உலக தலைவருமான ‘குடு சலிந்து’ என அழைக்கப்படும் சலிந்து மல்ஷித குணரத்னவுக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த குணரத்ன, மார்ச் 2023 இல் மடகாஸ்கரில் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனான’ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நடுன் சிந்தக விக்கிரமரத்னவுடன், இவர் மார்ச் 1, 2023 அன்று இன்ரப்போல், மடகாஸ்கர் சட்ட அமலாக்க மற்றும் சுங்க அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மற்ற ஆறு சந்தேக நபர்களுடன் மடகாஸ்கர் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இருவரும் பின்னர் மார்ச் 15 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

‘குடு சலிந்து’ பாணந்துறை பிரதான நீதவான் சமன் குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​அவருக்கு தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் பிணை வழங்கப்பட்டது. கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

இந்த வழக்கு பிப்ரவரி 10, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

Leave a Comment