நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டம் பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி சமந்தா துஷாரவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூறிய ஜமுனி சமந்தா துஷார, “பரீட்சை தினத்தன்று நாமல் ராஜபக்ச மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த இளைஞர் அன்றைய தினம் பரீட்சை கடமையில் இருந்த மண்டபத் தலைவர், சட்டக்கல்லூரி அதிபர், பதிவாளர் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட போதிலும், இது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் நீதியமைச்சின் அப்போதைய செயலாளர் சுஹத கம்லத்திடம் சென்றதாகவும், ஆனால் அவர் இந்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொள்ள மறுத்ததாகவும் தெரியவருகிறது.

அதன் பின்னர் அப்போதைய வாழைத்தோட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களுக்கும் சென்று முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர் குறித்த இளைஞன் தனது பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் சாட்சியங்களை பெற்று முறையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளேன்” என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...

போக்குவரத்து பொலிசார் ஒளிந்து நின்று வாகனங்களை மறிக்கக்கூடாது: கண்டிப்பான உத்தரவு!

போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டியிருக்கும் போது, ​​காவல்துறை உத்தியோகத்தர்கள்...

ஈரானின் அணுசக்தித் திட்டம் அல்ல, எண்ணெய் விலைகளை குறைப்பதே போரில் முதன்மையான முன்னுரிமை: அமெரிக்கா

ஈரான் போரில் அமெரிக்காவின் தற்போதைய முதன்மை முன்னுரிமை அதன் அணுசக்தித் திட்டம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்