26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் மற்றொரு எம்.பியின் கல்வித் தகைமையில் சர்ச்சை!

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கோசல நுவன் ஜயவீரவின் கல்வித் தகைமைகள் தொடர்பிலும் சிங்கள ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

‘பொறியியலாளர் கோசல ஜயவீர’ என பிரச்சார சுவரொட்டிகளைக் காட்டி கேகாலையில் போட்டியிட்ட அவர் பொதுத் தேர்தலில் 61,713 விருப்பு வாக்குகளைப் பெற்று கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஏழு திசைகாட்டி உறுப்பினர்களில் இரண்டாவது இடம்பிடித்தார்.

பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​அவர் தன்னை ஒரு பொறியியலாளர் என்று விளம்பரம் செய்து, தனது சுயவிபரத்தை பின்வருமாறு வெளியிட்டிருந்தார்-

“குருகலை கனிஷ்ட கல்லூரியிலும் எஹலியகொட மத்திய கல்லூரியிலும் பாடசாலைக் கல்வியை முடித்து திறந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் உயர் கல்வியை கற்று திறந்த பல்கலைக்கழக பொது மாணவர் சங்கத்தின் தலைவராக கடமையாற்றி சோசலிச கட்சியின் மாணவர் சங்கத்திலிருந்து (SSU). தேசிய அரசியலில் பிரவேசித்த சகோதரர் கோசல“ என குறிப்பிடப்பட்டிருந்தது.

திறந்த பல்கலைக்கழகத்தில் எந்தப் பொறியியல் படிப்பைப் படித்தார் என்பது தெரியவில்லை.

பாராளுமன்ற இணையதளத்தில் டிப்ளமோ பெற்றவர் என்றும், உதவிப் பொறியியலாளர் என்றும் தொழில் தகுதியாகப் பட்டியலிட்டாலும், அவர் பெயருக்கு முன்னால் பொறியியலாளர் என்ற பட்டத்தை எழுதும் அளவுக்கு பட்டம் பெற்றிருக்கவில்லை என்று தெரிகிறது.

பொறியியலாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களும் தற்போது அவரது சமூக ஊடக பக்கங்களில் இருந்து மறைந்துவிட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதியின் இந்திய பயணம்

east tamil

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

Pagetamil

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பற்றிய தகவல்!

Pagetamil

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

Leave a Comment