கல்முனை பிராந்திய வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா இன்று (14.12.2024 – ஞாயிற்றுக்கிழமை) கல்முனை பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை கிளெனி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட வின்சன் டி பவுல் சபையின் ஆன்மீக இயக்குனர் அருட்பணி S. இக்னேசியஸ் அடிகளார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
மேலும், கல்முனை பிராந்திய வின்சன் டி பவுல் சபையின் ஆன்மீக இயக்குனர் அருட்பணி A. ரெறன்ஸ் றாகல் அடிகளார், கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி பேதுரு ஜீவராஜ் அடிகளார் மற்றும் அருட் சகோதரர் தயா ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழா சமூகத்தினரிடையே ஒற்றுமை, சுயநம்பிக்கை மற்றும் இரக்க உணர்வுகளை ஊக்குவிக்க முக்கிய பங்கு வகித்ததாக பார்க்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1