‘நான் இன்னும் சாகல…’: மயானத்தில் எழுந்து உட்கார்ந்த மூதாட்டி!

Date:

இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டு சென்ற மூதாட்டி உயிருடன் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சி அருகே இருக்கிறது வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பம்பைன். இவரது மனைவி சின்னம்மாள் (60) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சையை கடந்து அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால், அவரை அவரது உறவினர்கள் வீட்டுக்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர், அந்தப் பெண்மணி இறந்ததாக கருதிய அவரது உறவினர்கள் அவருக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்தனர். எல்லா ஊர்களில் உள்ள உறவினர்களும் வரவழைக்கப்பட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்னொரு பக்கம், கடைசியாக அந்த மூதாட்டிக்கு இறுதி சடங்கு நடத்த மயானப் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென கண் விழித்ததோடு, ‘நான் என்ன செத்தா போய்விட்டேன்?. நான் இன்னும் சாகலை. என்னை எரிக்க்ப் பார்க்கிறீங்களா?. எனக்கு இப்போதைக்கு சாவில்லை’ என்று கூறியதால், அருகில் இருந்த உறவினர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர். இதனால், உடனடியாக தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அந்த மூதாட்டியை அழைத்துச் சென்று, சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த மூதாட்டிக்கு தற்போது அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

இன்று பல பகுதிகளிலும் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது...

இலங்கையிலா இப்படி?: அதிர வைக்கும் புள்ளிவிபரம்

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டில் பதின்ம வயதினர் கர்ப்பமடைந்த...

கனடாவிற்கு கப்பலில் புறப்பட்ட இலங்கைத்தமிழர் அனாதையாய் ஆபிரிக்காவில் உயிரிழந்த சோகக்கதை!

பாதுகாப்பைத் தேடி இந்தியாவிலிருந்து கனடாவுக்குப் புறப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரின் நீண்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்