24.9 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

ரவியின் தேசியப்பட்டியல் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை தேசிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வர்த்தமானியை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேசிய ஐக்கிய கூட்டமைப்பு (NUA) நேற்று (18) கடிதம் எழுதியுள்ளது.

தேசிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக ரவி கருணாநாயக்கவை நியமித்தது தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளரால் கருத்தொற்றுமையின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது என NDF கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான NUA தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் NUA உட்பட ஏனைய NDF கூட்டணிக் கட்சிகளின் அங்கீகாரம், NDF மற்றும் அதன் ஏனைய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) மீறி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தேசியப் பட்டியல் இடங்களை நிரப்புவதில் பல விரும்பத்தகாத மற்றும் சட்டவிரோதமான சம்பவங்கள் பதிவாகி பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளதாக NUA தெரிவித்துள்ளது.

என்.டி.எப் தேசியப் பட்டியலில் இருந்து ரவி கருணாநாயக்கவின் நியமனம் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்றும், அந்த வேட்புமனுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க NUA திட்டமிட்டுள்ளதாகவும் NUA தெரிவித்துள்ளது.

NUA தலைவர் அசாத் சாலி, தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், NDF செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தின் செல்லுபடியை உறுதிப்படுத்தாமல் ரவி கருணாநாயக்கவின் பெயரை NDF இன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளார்.

இதேவேளை, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக முன்னணியின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்கவை, தேசியப்பட்டியல் எம்.பியாக நியமித்து தேர்தல் ஆணையத்திற்கு NDF கட்சியின் செயலாளர் அனுப்பிய கடிதம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

எனினும். ரவி கருணாநாயக்கவை தேசியப்பட்டியல் எம்.பியாக குறிப்பிட்டு, தேர்தல் ஆணைக்குழு நேற்று வர்த்தமானியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடி விவகாரத்தில் ரவி கருணாநாயக்கவும் பிரதான சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்தது தெரிந்ததே.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதி – ரவிகரன் எம்.பி.

east tamil

யாழ் கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம்: இந்திய துணைத்தூதருக்கு சீ.வீ.கே கடிதம்!

Pagetamil

‘அரிசி ஆலைகள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்’: ஜனாதிபதி எச்சரிக்கை!

Pagetamil

பாராளுமன்றத்தில் உணவுகளின் விலைகள் அதிகரிக்கும்!

Pagetamil

பொலிஸ் தடுப்புக்காவலில் உயிரை மாய்த்த வவுனியா இளம்பெண்!

Pagetamil

Leave a Comment