25.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்புக்கள் சொல்வதென்ன?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து,
சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது.

3 ஜனாதிபதி மன்ற வாக்குகளைக் கொண்ட வெர்மோண்ட்டில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்றும், 8 ஜனாதிபதி மன்ற வாக்குகளைக் கொண்ட கெண்டக்கி மாநிலத்தைத் டொனால்ட் ட்ரம்ப் கைப்பற்றியிப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

இண்டியானா மாநிலத்திலும் வெஸ்ட் வெர்ஜீனியாவில் மாநிலத்திலும் ட்ரம்ப் வென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இண்டியானாவில் ஜனாதிபதி மன்ற வாக்குகள் 11.

வெஸ்ட் வெர்ஜீனியாவில் ஜனாதிபதி மன்ற வாக்குகள் 4.

முக்கியமான ஜோர்ஜியா மற்றும் வட கரோலினா உட்பட ஒன்பது அமெரிக்க மாநிலங்களில் மிகக் கடுமையான போட்டி உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஜோர்ஜியா, வட கரோலினா, அரிசோனா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய ஏழு மாநிலங்களுக்கு நெருக்கமான போட்டியுள்ளதை கணிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

வாக்களிப்பின் பின்னரான, எடிசன் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பின்படி, கிட்டத்தட்ட முக்கால்வாசி வாக்காளர்கள் அமெரிக்க ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை வாக்காளர்களுக்கு மிக முக்கியமான பிரச்சினைகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொன்றையும் மேற்கோள் காட்டி, கருக்கலைப்பு மற்றும் குடியேற்றம். 73% வாக்காளர்கள் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக நம்புவதாகவும், 25% பேர் பாதுகாப்பானது என்றும் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

வாக்குப்பதிவு முடிவடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டிரம்ப் தனது  சமூக தளத்தில் பிலடெல்பியாவில் “பாரிய மோசடி பற்றி நிறைய பேச்சு” இருப்பதாக ஆதாரம் இல்லாமல் கூறினார்.  அடுத்த பதிவில், டெட்ராய்டில் மோசடி நடந்ததாகவும் அவர் வலியுறுத்தினார். 2020 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் போதும், ட்ரம்ப் இப்படி கூறியிருந்தார்.

“நான் முட்டாள்தனத்திற்கு பதிலளிக்கவில்லை,” என்று டெட்ராய்ட் நகர பதிவாளர் ஜானிஸ் வின்ஃப்ரே ரொய்ட்டர்ஸிடம் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment