25.4 C
Jaffna
January 14, 2025
Pagetamil
மலையகம்

நானுஓயா விபத்திற்கான அதிர்ச்சிக் காரணம்!

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் ஹைஏஸ் வாகனமும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் ஹைஏஸ் வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். .

இந்த விபத்து நேற்று (01) இரவு 7 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சமர்செட் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

5 தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்களை அதிகளவு மேம்பாலங்கள் கொண்ட அந்த வீதியில் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும் லொறி சாரதி லொறியை ஓட்டிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லொறியின் பிரேக் திடீரென செயலிழந்து நுவரெலியா நோக்கி சென்ற வாகனம் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update – டிக்கோயா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பிரவாசி பாரதிய திவாஸ்: இந்தியத் தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

east tamil

கொட்டகலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து

east tamil

16 வயது மாணவி மாயம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

Leave a Comment