ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்ட பிறகு அதன் உயர்மட்ட தலைவர் ஹஷேம் சஃபிதீன் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பு புதன்கிழமை கூறியது.
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சஃபிதீன் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியது.
நஸ்ரல்லாஹ்வின் படுகொலைக்குப் பின்னர் ஹிஸ்புல்லாஹ்வின் துணைப் பொதுச்செயலாளர் நைம் காசிமுடன் இணைந்து சஃபிதீன் இயங்கி வந்தார், மேலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் அடுத்த பொதுச் செயலாளராக முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நஸ்ரல்லாவின் உறவினரான சஃபிதீன் குழுவின் ஜிஹாத் கவுன்சிலில் அங்கம் வகித்தார். – அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைப்பு இது. அவர் அதன் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தார், ஹிஸ்புல்லாவின் நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களை மேற்பார்வையிட்டார்.
இஸ்ரேலுடனான விரோதப் போக்கில் ஹிஸ்புல்லாவுக்குப் பேசும் முக்கியப் பாத்திரத்தை சஃபிதீன் ஏற்றுக்கொண்டார், அது இறுதியில் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.