24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரச்சாரம்

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டமானது இன்றையதினம் வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் கூட்டம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தமது அறிமுக விளக்க உரைகளை ஆற்றினர்.

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான கே.வி.தவராசா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், புவனேஸ்வரன் வசந், விமலேஷ்வரி சிறிகாந்தரூபன், குணாளன் கருணாகரன் ஆகியோரது பேச்சுகளும் இடம்பெற்றது.

இதன் பொழுது காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் பிரததேச சபை உறுப்பினர்கள் ,வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

சிற்றி வன்பொருள் வர்த்தக நிறுவனம் மீது அவகீர்த்தி சுமத்தியதற்காக எம்.பி. மீது குற்றச்சாட்டு

east tamil

Leave a Comment