திருமலையில் தமிழ் அரசும் ஏனைய கட்சிகளும் இணைந்து போட்டி

Date:

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனு நியமன குழுவின் இன்றைய வவுனியா கூட்டம் தொடர்பாக கிளிநொச்சியில் உள்ள எஸ்.சிறிதரனின் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஏற்கனவே யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் நியமனங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இன்று வன்னி மற்றும் அம்பாறை தேர்தல் மாவட்டங்களுக்கான பெயர்ப்பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான நியமனப்பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளோடு சேர்ந்து தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனு நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்