28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil
குற்றம்

32 வயதான பெண் அரச உத்தியோகத்தரும், 18 வயது மாணவனும் தலைமறைவு: யாழில் பரபரப்பு சம்பவம்!

யாழ்ப்பாணம் உரும்பிராய் பிரதேசத்தில் 32 வயதான திருமணமாகாத பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர் 18 வயதுடைய உயர்தர மாணவர் ஒருவருடன் தப்பிச் சென்றதையடுத்து இருவரையும் கைது செய்ய கோப்பாய் பொலிஸார்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

32 வயதான குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் உள்ள அரச நிறுவனமொன்றின் பணியாற்றுகிறார்.

தலைமறைவான பெண் அரச உத்தியோகத்தருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தொடர்ந்து முயற்சித்துள்ளனர். எனினும், பெற்றோர் பார்க்கும் வரன்களை, மகள் நிராகரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவனின் குடும்பத்துக்கும், குறிப்பிட்ட பெண் அரச உத்தியோகத்தரின் குடும்பத்துக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருந்துள்ளது.

இறுதியாக, பொறியியலாளர் ஒருவரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சித்தனர். எனினும், மகள் அதனையும் நிராகரித்துள்ளார். எனினும், பொறியியலாளரை திருமணம் செய்ய வேண்டுமென பெற்றோர் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், பாடசாலை மாணவனுடன், அந்த பெண் அரச உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில், வாந்தி, தலைவலி காரணமாக மேற்படி பெண் அரச உத்தியோகத்தர் மருத்துவரிடம் சென்றதும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட இரத்த, சிறுநீர் பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவனின் பெற்றோர் கோப்பாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இருவரையும் கைது செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

UPDATE: கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிததற்கு காரணம் இதுவா?: மனைவியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

Pagetamil

Leave a Comment