மட்டக்களப்பு ஏறாவூர் போலிஸ் பிரிக்குக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை வீட்டில் இருந்து மீன் பிடிப்பதாக கூறி விபுலானந்தபுரம் பகுதிக்கு சென்ற
மயிலம்பாவெளி பாடசாலை வீதியை சேர்ந்த ராமலிங்கம் பாக்கியராசா (57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை மாலை முதல் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில் இரவு 07 மணி அளவில் மயிலம்பாவெளி காட்டு பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று காலை 06.30 மணியளவில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.